விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட பூசாரிபாளையம், டி.கொளத்தூர், ஒட்டனந்தல், ஆமூர் மற்றும் ஆமூர்குப்பம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்து உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் கொட்டி மறியல்! - Dairy producers protest
விழுப்புரம்: ஒரு வார காலமாக பால் கொள்முதல் செய்யாத ஆவின் நிர்வாகத்தைக் கண்டித்து உற்பத்தியாளர்கள், பாலை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கால்நடைகளிடமிருந்து கறக்கப்படும் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால், கடந்த ஒருவார காலமாக இந்த பகுதிகளில் பால் கொள்முதல் செய்யப்படாததால், அனைத்தும் வீணானது. இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் இன்று (ஆகஸ்ட் 11) மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் பாலைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலை சாலையில் கொட்டியதால் ஆறாக ஒடியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஆவின் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை எடுத்தனர்.