விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது! - Man arrested under preventive detention act for illegal selling liquor
விழுப்புரம்: நரசிங்கபுரத்தைச் சேர்ந்த சாராய வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
![தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது! Goondas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:01:29:1603459889-tn-vpm-03-bootlegger-arrest-scr-7205809-23102020184801-2310f-1603459081-188.jpg)
Goondas
இதையடுத்து, இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று முனியப்பனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்.
அதன் பேரில் இன்று (அக்டோபர் 23) முனியப்பனை கைது செய்த விழுப்புரம் நகர காவல்துறையினர், அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.