உளுந்தூர்பேட்டை அருகே திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிற்குள்பட்ட அருங்குறிக்கைபுதூர் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருவதாகத் தனிப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
உடனே காவல் துறையினர் அங்கு சென்று சோதனை செய்தபோது, திருக்கோவிலூர் அருகே கொரக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (47) என்பவர் சாராயம் விற்பது தெரியவந்தது.
அவரைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை செய்ததில், அவர் சாக்கு மூட்டைகளில் வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள இரண்டாயிரம் லிட்டர் கள்ளச்சாராயத்தை மூட்டைகளில் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவற்றை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
மூட்டைகளில் அடைத்து கள்ளச்சாராயம் விற்றுவந்தவர் கைது இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில்சென்று விசாரணை மேற்கொண்டார். செல்வம் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்றுவருவதால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். பிடிபட்ட கள்ளச்சாராயத்தைக் காவல் துறையினர் மரக்கட்டில் பள்ளம் வெட்டி கீழே கொட்டி அழித்தனர்.
இதையும் படிங்க: 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 3 பேர் கைது