தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேருந்து ஓட்டுநர் கைது! - மாற்றுதிறனாளி பெண்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர். தலைமறைவான மற்றொரு நபரைத் தேடிவருகின்றனர்.

man-arrested-for-sexually-harassing-disabled-woman
man-arrested-for-sexually-harassing-disabled-woman

By

Published : Nov 23, 2020, 9:00 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிபாலன். இவரது மனைவி பரிமளா (35) மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பரிமளா, ஆட்சிப்பாக்கத்தில் இருந்து ஆவணிப்பூரில் உள்ள வங்கிக்குச் செல்ல பிரதான சாலையில் நின்றிருந்தார். அப்போது, ஆட்சிப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான ரவிபாபு (33), அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (32) ஆகியோர் பரிமளாவை, வங்கியில் இறக்கிவிடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆவணிப்பூர் அரசு உயர் நிலைப்பள்ளி பின்புறம் இருவரும் சேர்ந்து பரிமளாவுக்கு பாலியல் தொந்தரவு தந்துவிட்டு, மீண்டும் அழைத்துவந்து வங்கி வாசலில் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் பரிமளா நடந்தவற்றை தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பரிமளாவின் தாய் குப்பு (50) திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டிவனம் காவல் துறையினர், தனியார் பேருந்து ஓட்டுநரான ரவிபாபுவை கைதுசெய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரனைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details