விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் ஆனத்தூர்ப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன்(30). அவருக்கும் திருமுண்டீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் என்பவருக்கும் வீடு கட்டும் பணி ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அதனால் சந்திரபோஸ் திருவெண்ணைய்நல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேலிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் தங்கவேல் மற்றும் தலைமை காவலரும் முத்துராமனிடம் விசாரிக்க நேரில் சென்றனர்.
அங்கு விசாரணை நடத்தியதில் முத்துராமனுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது.