விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி மாத பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு காலை முதலே அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை 3.45 மணிமுதல் மஞ்சள் ஆடை அணிந்து நீண்ட வரிசையில் நின்று தீ மிதித்து தங்களது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.
அவர்களை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துறையைச் சேர்ந்த பலர் தீ மிதித்து தங்களது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர்.
இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்த விழாவில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீ மிதித்த எஸ்.பி! - மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழா
விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு தீ மிதித்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீ மிதித்த எஸ்.பி
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தீ மிதித்த எஸ்.பி
TAGGED:
malayanur_temple_festival