தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் நலப் பணியாளர்கள் ரத்தம் விற்கும் போராட்டம் - The struggle to sell blood in Viluppuram

விழுப்புரம்: மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த காலங்களில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் ரத்தம் விற்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்
போராட்டம்

By

Published : Jan 7, 2021, 8:26 PM IST

10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியின்போது மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்த மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (ஜன. 07) விழுப்புரத்தில் மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில் ரத்தம் விற்கும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு தங்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details