தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு...காணாமல் போன ஆவணங்களின் நகல்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு - விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் மாயமான ஆவணங்களின் நகல்களை விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு
பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் வழக்கு

By

Published : Sep 6, 2022, 2:03 PM IST

கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி வழக்கு விசாரணையில் அரசு சாட்சிகள் விசாரணை முடிந்த பின்னர் நீதிபதி புஷ்ப ராணி, வழக்கின் முக்கிய ஆவணங்களை எடுத்து வர நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அச்சமயம் முக்கிய கோப்புகள் காணவில்லை என நீதிமன்ற ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கோப்புகளை உடனடியாக கண்டுபிடிக்கும்படி நீதிபதி ஆணையிட்டார். பலமுறை தேடியும் கோப்புகள் கிடைக்காததால் நீதிமன்ற ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தும் இரண்டு நாட்களுக்கு முன்னர் மிகவும் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அன்றைய தினம் சிபிசிஐடி வசம் உள்ள நகல் கோப்புகளை அடுத்து விசாரணையில் சமர்ப்பிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் காணாமல் போன முக்கிய ஆவணங்களின் நகல்களை சிபிசிஐடி காவல்துறை நீதிபதி புஷ்ப ராணி முன்னர் சமர்ப்பித்தனர். மேற்கண்ட விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்; மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்

ABOUT THE AUTHOR

...view details