தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்த மதுரை ஆதீனம் - MADURAI ADHEENAM in Villupuram

இந்து மதம் குறித்து ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால், விழுப்புரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பை மதுரை ஆதீனம் பாதியில் முடித்துக் கொண்டார்.

செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்த மதுரை ஆதீனம்
செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்த மதுரை ஆதீனம்

By

Published : Sep 23, 2022, 11:22 AM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள சிவன் கோயிலுக்கு மதுரை ஆதீனம் நேற்று (செப் 22) காலை வந்தார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்ற மதுரை ஆதீனத்திடம், இந்துக்கள் பற்றி ஆ.ராசா அவதூறாக பேசி வருகிறாரே; உங்கள் கருத்து என்ன? என்று நிரூபர்கள் கேட்டனர். இதற்கு மதுரை ஆதீனம் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார். தொடர்ந்து நிரூபர்கள் மதுரை ஆதீனத்திடம், “நீங்கள் ஒரு இந்து அமைப்பைச் சார்ந்தவர். இதற்கு நீங்கள் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்” என தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்த மதுரை ஆதீனம்

‘இதற்கு பதில் சொல்ல முடியாது’ என ஆதீனம் எழுந்து சென்றார். இதனால் செய்தியாளர் சந்திப்பு பாதியில் முடிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மதுரை ஆதினத்திற்கு சொந்தமான நீர் தேக்க தொட்டியை இடிக்க கோரி மனு

ABOUT THE AUTHOR

...view details