தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்... - காதல் விவகாரம்

விழுப்புரம் அருகே திருமணமான இளைஞர் ஒருவர் இரண்டே நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்...
காதல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்...

By

Published : Jun 28, 2022, 11:44 AM IST

Updated : Jun 28, 2022, 12:59 PM IST

விழுப்புரம் :அருகே ந.புதூரை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் கடந்த 7 வருடங்களாக உறவு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் காதலித்த பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மணமுடித்த அந்த பெண் தன்னுடன் பழகிய வேறு ஒரு நபருடன் ரை காதலித்து அவருடன் சென்றுவிட்டதாகவும் இதனால் மனமுடைந்த குமரேசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தன்னுடைய வீடியோ பதிவில் கூறியதாவது ”கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் காதலித்தது வின்னத்தூர் மற்றும் ந.புதூரை சேர்ந்த இரண்டு கிராம மக்களுக்கும் தெரியும். அந்த பெண்னை அருகில் உள்ள தெள்ளார் கல்லூரியில் நான் தான் படிக்கச் சொன்னேன்.

காதல் விவகாரம்; வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்...

அவரது குடும்ப வறுமை காரணமாக அவருக்கு ஒரு வேலையும் வாங்கி கொடுத்தேன். என்னிடம் திருமணத்திற்கு முன்பே இதைப்பற்றி சொல்லி இருக்கலாமே, நான் மேற்கொள்ளும் இந்த மரணம் அந்த பெண்ணிற்காக அல்ல எனறு தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:விபரீதம்: காளி தேவிக்கு நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய இளம்பெண்

Last Updated : Jun 28, 2022, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details