தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்காதீர்: விழுப்புரம் காவல் துறை அறிவுரை

விழுப்புரம்: அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் யாரும் வாங்க வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

lottery complaint number
lottery complaint number

By

Published : Dec 14, 2019, 9:13 PM IST

விழுப்புரத்தைச் சேர்ந்த அருண் என்பவர் லாட்டரி சீட்டு மோகத்தால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு தனது மனைவி, மூன்று மகள்களுக்கு சைனைடு கலந்த விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சட்டவிரோதமாக ஆன்-லைன் முறையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த 14 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தடை செய்யப்பட்டுள்ள மூன்றாம் நம்பர் லாட்டரி சீட்டு

இந்நிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட மூன்றாம் எண் லாட்டரி சீட்டுகளை பொதுமக்கள் வாங்கி நஷ்டம் அடைய வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விழுப்புரம் பகுதியில் யாரேனும் ஆன்-லைன் லாட்டரி விற்பனை செய்தால் விழுப்புரம் நகர காவல் நிலைய செல்பேசி எண்ணான 9498100489-க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தருபவர் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட காவல் துறை

இதையும் படிங்க:

லாட்டரி விற்பனை: காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details