தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் கிடா விருந்து: லாரி - டிராக்டர் விபத்து - படுகாயம்

விழுப்புரம்: கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய கிராம மக்கள் மீது லாரி மோதிய விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

file pic

By

Published : Jun 1, 2019, 12:30 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மட்டிகைகுறிச்சி கிராம மக்கள் சின்ன சேலத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கிடா விருந்துக்காக டிராக்டரில் சென்றனர். விருந்து முடிந்து தங்களது ஊருக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்களது டிராக்டர் கடத்தூர் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது விழுப்புரத்தில் இருந்து வந்த மினி லாரி டிராக்டர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும், டிராக்டரில் பயணம் செய்த இருபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த சின்ன சேலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ABOUT THE AUTHOR

...view details