விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் மலைப் பகுதியிலிருந்து கருங்கல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி கீழ்அருங்குணம் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை அருங்குணம் பகுதியைச் சேர்ந்த ரகுராமன்(35) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அந்தரத்தில் தொங்கிய லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்! - lorry accident in viluppuram
விழுப்புரம்: திண்டிவனம் அருகே கருங்கல் ஏற்றிவந்த லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் கீழ்அருங்குணம் பகுதியிலுள்ள வரதன் கல்குவாரி அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கல்குவாரியில் வெட்டப்பட்ட நிலையில் உள்ள 100 அடி பள்ளத்திற்குள் பாய்ந்து அந்தரத்தில் தொங்கிநின்றது.
பின்பு, அப்பகுதி வழியே சென்ற சிலர் லாரி பள்ளத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு திண்டிவனம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த முகுந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து ஓட்டுனர் ரகுராமனை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிலமணி நேரப்போராட்டத்திற்கு பிறகு லாரியும் மீட்கப்பட்டது.