விழுப்புரம் புறவழிச் சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் ஏரியில் மண் அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அரசு நிர்ணயித்துள்ள அளவைவிட அதிகமாக மண் அள்ளப்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஏரியில் பெருமளவு பள்ளம் ஏற்படுவதால் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரில் சிலர் தவறி விழுந்து உயிரிழப்பு நேரிடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், சோழகனூர் ஏரியில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் இன்று (டிச. 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.