விழுப்புரம்:தமிழ்நாட்டில் விழுப்புரம் நகரம் என்பது ஒரு தவிர்க்க முடியாத நகரமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களையும் தெற்கு மாவட்டங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய சந்திப்பாக விழுப்புரம் ரயில்வே வழித்தடம் உள்ளது.
சென்னையில் வேலை பார்க்கும் பல ஐடி நிறுவன ஊழியர்களாக இருக்கட்டும், தினக்கூலி ஊழியர்களாக இருக்கட்டும் சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கும் அளவிற்கு வசதி இல்லாமல் விழுப்புரத்தில் தங்கி இங்கிருந்து தினமும் ரயிலின் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர்.
விழுப்புரம் ரயில்வே சந்திப்பில் இருந்து தான் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநில பொதுமக்கள் வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக இயக்கபடும் ரயில்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்ய கூடிய சூழ்நிலை உள்ளது. இந்தகைய ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் பெயரளவுக்கு அதாவது இரண்டு அல்லது மூன்று பெட்டிகள் வீதம் இணைக்கப்படுகின்றன.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளும், சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு பயணம் செய்யும் பயணிகளும் இந்தகைய முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளில் சிரமத்துடன் பயணம் செய்யும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
பொதுமக்கள் பலர் பலமுறை துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை மற்றும் இதனை மனுவாக அளித்து உள்ளனர். ஆனால் தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் இதற்கு செவி சாய்ப்பதாக இல்லை. மேலும், சென்னையிலிருந்து விழுப்புரம் வரும் ரயில்களில் அளவுக்கு அதிகமான கூட்டம் நிற்க கூட இடம் இல்லாமல் படிக்கட்டு பயணம் மேற்கொள்கின்றனர்.
படிக்கட்டுப் பயணம் மேற்கொள்ளும் சில பயணிகள் கீழே விழுந்து உயிரிழப்பு சம்பவங்களும் தினசரி செய்திகளில் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றது. இதனால் பல பயணிகள் பேருந்தை நோக்கி பயணம் செல்லக் கூடிய சூழ்நிலை உள்ளது. முன் பதிவு செய்யபட்டு வரும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகம்.
ஏசி பெட்டிகள் கூட அதிகம் ஆனால் முன்பதிவு அல்லாத ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை பெயர் அளவிற்கு இரண்டு மூன்று ஏழ்மையான மக்கள் இரயில் பயணத்தையே நம்பி இருக்கின்றனர். இவர்களுக்காக முன்பதிவு அல்லாத ரயில் பெட்டிகளை இணைக்க மத்திய அரசிடமோ மற்றும் தென்னக ரயில்வேயிடமோ போதுமான தங்கள் இல்லையா என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் சரி, பாஜக நிர்வாகிகளும் இது குறித்து ஏன் பேசுவதவில்லை. ஏன் அவர்கள் மத்திய அரசிடம் சொல்லவில்லை என்பது தான் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடன் கேள்வியாக உள்ளது. எனவே வருங்காலங்களில் காலை, மாலை நேரங்களில் வரும் ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை கூடுலாக இணைக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் பொதுமக்கள் முறையாக பயணச்சீட்டு எடுத்து செல்ல கூடிய சூழ்நிலை உள்ளது. மற்ற மாநிலங்களில் கண்டிப்பாக இந்த நிலைமை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் . எனவே மத்திய அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு முன் பதிவு அல்லாத கூடுதல் பெட்டிகளை ரயில்களில் இணைக்க வேண்டும் என்பதே ரயில் பயணத்தையே தினமும் நம்பி பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு