தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை! - விழுப்புரத்தில் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்காளம்மன் கோயில் திருவிழா
அங்காளம்மன் கோயில் திருவிழா

By

Published : Feb 4, 2020, 11:39 PM IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் வருகிற 28ஆம் தேதியன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அன்று ஒருநாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அவசர அலுவலகங்களை கவனிக்கும்பொருட்டு, விழுப்புரம் மாவட்ட கருவூலகமும், சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

மேலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின், அந்தத் தேர்வுகள் அந்த தேதியில் வழக்கம்போல் நடைபெறும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 28.02.2020ஆம் தேதிக்குப் பதிலாக ,14.03.2020 ஆம் தேதி (சனிக்கிழமை) பணிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரிய கோயில் கும்பாபிஷேகம் - தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details