தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4-அடி ஆழத்தில் நீச்சலடிக்கும் சிறுமி! - Adventure child

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நான்கு அடி ஆழ தொட்டியில் இரண்டு வயது சிறுமி ஒருவர் நீச்சல் அடிப்பது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீச்சலடிக்கும் சிறுமி
நீச்சலடிக்கும் சிறுமி

By

Published : Sep 26, 2020, 12:35 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பொம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இளவரசன் - கனகவதி தம்பதி. இவர்களுடைய இரண்டு வயது மகள் சுகன்யா. இவர் அந்த பகுதியில் உள்ள நான்கு அடி ஆழ தொட்டியில் நீச்சல் அடித்து அசத்துகிறார். இது பார்ப்போரை வியப்படைய வைக்கிறது.

நீச்சலடிக்கும் சிறுமி

இதுபற்றி சிறுமியின் தந்தை இளவரசன் கூறும்போது, ”சுகன்யா எட்டு மாத குழந்தையாக இருக்கும்போது நீர் நிரப்பிய தொட்டியில், காற்று நிரப்பிய டீயூப் மூலம் விளையாட பழகினோம். அது நாளடைவில் பழகி நன்கு மூச்சு அடைக்க பழகி உள்ளார். தற்போது 30 வினாடிகள் வரை நீரில் மூழ்கி மூச்சை அடக்கும் திறன் பெற்று உள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: ‘என்னை தூக்கிவிட்டவர் அவர்’- எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details