மேல்மலையனூர் அருகே வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திப்பதாக விழுப்புரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்குமாறு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செஞ்சி உட்கோட்டம் வளத்தி காவல் நிலைய ஆய்வாளர் சுபாவிற்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆய்வாளர் சுபாவிற்கு வந்த ரகசிய தகவலின்படி, நேற்றிரவு தனிப்பிரிவு தலைமை காவலர் பாரதி, முதல் நிலை காவலர் மோகன் ஆகியோர் அவலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டபூண்டி அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு மாட்டுக் கொட்டகையில் சுமார் ஆறு லட்சம் மதிப்புள்ள ஐந்து ஆயிரத்து 280 வெளிமாநில (புதுவை) மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.