விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு பிரிவு சிறப்பு ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல்துறையினர், இன்று காலை பனையபுரம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வாகனத்தை சோதனையிடப்பட்டது. அதில் புதுச்சேரியிலிருந்து 20 பெட்டிகளில் 960 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
விழுப்புரம் அருகே ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டிகளை, பனையபுரம் அருகே மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டிகள்
இதனையடுத்து, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கடத்தி வந்தவர்களை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விழுப்புரம் வடனூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பூவரசன் எனபது தெரிய வந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.