தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் மது கடத்தல்: துரத்தும் காவல் துறை! - எரிசாரயம் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர்

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே நூதன முறையில் எரிசாராயம் கடத்தி வந்த வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

எரிசாராயம் கடத்தி வந்த லாரி
எரிசாராயம் கடத்தி வந்த லாரி

By

Published : Mar 5, 2020, 1:02 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த கிளியனூர் சோதனை சாவடியில், காவல் துறையினர் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வைக்கோல் ஏற்றி வந்த கேரளா மாநில பதிவெண் கொண்ட வாகனத்தை, காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்தபோது, வாகன ஓட்டுநர் தப்பியோடியுள்ளார்.

எரிசாராயம் கடத்தி வந்த லாரி

இதைத்தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 875 லிட்டர் எரிசாரயம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோட்டக்குப்பம் மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள்

அதேபோல், திண்டிவனம் அருகேயுள்ள பிரம்மதேசம் எல்லைக்குட்பட்ட தேவனந்தல் ஏரிக்கரையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் 864 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கருணாகரன், பெரியசாமி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிலை கடத்தல் வழக்கு: 11 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details