தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பதுக்கி வைத்திருந்த கள்ளச் சாராயம் பறிமுதல் - Vilupuram

விழுப்புரம்: பதுக்கி வைத்திருந்த 600 லிட்டர் கள்ளச் சாராயம் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச் சாராயம் பறிமுதல்

By

Published : May 4, 2019, 7:24 PM IST

விழுப்புரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முகிலன் தலைமையின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று இரவு பிரம்மதேசம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதில், பிரம்மதேசம் ஏரிக்கரை தெருவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 17 நெகிழி கேன்களில் 600 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 600 லிட்டர் சாராயத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

மேலும் காவல் துறையினர் இவ்வழக்கில் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மீது கள்ளச்சாராய வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details