தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது! - Liquor sale women arrest in goondas villupuram

விழுப்புரம்: சட்டத்திற்குப் புறம்பாகச் சாராயம் விற்பனை செய்து வந்த கங்கா என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

liquor
liquor

By

Published : Dec 28, 2019, 2:43 PM IST

விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி கங்கா (52). சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கங்கா மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில், கங்காவை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை அருகே சாராயம் காய்ச்சிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details