தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தல் - இருவர் கைது - ராஜகுமரன்

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்த முயன்ற 7 ஆயிரத்து 700 மதுபாட்டில்கள் மதுவிலக்கு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Sep 30, 2021, 10:11 AM IST

விழுப்புரம் மாவட்டம் தென்னல் பகுதியில் விழுப்புரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த ஒரு வேனை மறித்து சோதனையிட்ட போது 7200 மதுபாட்டில்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட ராஜகுமரன், பிரவீன் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 7 ஆயிரத்து 700 மதுபாட்டில்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தல் - இருவர் கைது

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் வேன் ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் ஆகும். மதுக்கடத்தலை தடுக்க கூடுதல் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுததப்பட உள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் - ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details