தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வழக்கறிஞர் பகீர் தகவல் - வழக்கறிஞர் பகீர் தகவல் கள்ளக்குறிச்சி மாணவி மரணம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தற்கொலை அல்ல என வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வழக்கறிஞர் பகீர் தகவல்
வழக்கறிஞர் பகீர் தகவல்

By

Published : Aug 25, 2022, 5:08 PM IST

கள்ளக்குறிச்சி மாணவியின் முதல் மற்றும் இரண்டாவது உடற்கூறாய்வு பரிசோதனை முடிவுகளில் பல வேறுபாடுகள் உள்ளன. முதல் பிரேத பரிசோதனை முடிவுகளை விட, 2ஆவது உடற்கூறாய்வு பரிசோதனையில் மாணவியின் உடலில் அதிக காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் பகீர் தகவல்

எலும்பு முறிவுகள் அதிகமாக இருப்பதாக 2ஆவது பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாணவியின் முதல் மற்றும் இரண்டாவது உடற்கூறாய்வு பரிசோதனை முடிவுகளை மாணவி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் பெற்றார்.

அதனை தங்கள் தரப்பு அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்தார். அப்போது இது தற்கொலை அல்ல பாலியல் சீண்டுதல் நடைபெற்றதற்கான தடயம் உள்ளது என தகவல் தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க:பில்கிஸ் பானு வழக்கு... மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு...

ABOUT THE AUTHOR

...view details