விழுப்புரம்:கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. அப்பம்பட்டு, சென்னாலூர், புத்தகரம் உள்ளிட்ட இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது.
அப்பம்பட்டு பகுதியில் உள்ள ஏரி உடைந்ததில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் (Flood) புகுந்தது. அப்பகுதியில் வசித்த மக்கள் 300 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் விளை நிலங்களில் சூழ்ந்ததால் (crop damage) பயிர்கள் சேமடைந்துள்ளது.