தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுங்கட்சி பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி! - விழுப்புரம் மாவட்ட செய்திகள்

அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர், தங்களது நிலத்தை அபகரித்து விட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முன்பு, பெண் ஒருவர் தன் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி
ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி

By

Published : Feb 15, 2021, 3:56 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ராகவன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம்; இவரது மனைவி கன்னியம்மாள்(40).

இவர் தனக்கு சொந்தமான 10 செண்ட் இடத்தினை, கோலியனூர் அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன், அபகரிக்க திட்டமிட்டு கொலை மிரட்டல் விடுவதாக கூறி இன்று (பிப்..15) ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்தார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையைத் தன்மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர்மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி, கன்னியம்மாளை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'அதிகரிக்கும் எரிவாயு விலை... மானியத்தை உயர்த்துக'

ABOUT THE AUTHOR

...view details