விழுப்பரம்மாவட்டத்தில் 2 சிறுவர்களை தன்பாலின சேர்க்கைக்கு வற்புறுத்தி கொடூரமாக கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மரக்காணத்தை அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைமணி என்பவரது மகன் அபினேஷ(22) கொலை செய்த 3 பேரை குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை தன்பாலின சேர்க்கைக்கு வற்புறுத்தி கொலை செய்தவர் கொலை வழக்கு: கோட்டக்குப்பம் காவல் நிலைய சரகம் ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த 8.04.2022 அன்று சிறுவர்களை தன்பாலின உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தி கொலை செய்துவந்த, பிரபல ரவுடி அவினேஷ் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட சதீஸ், அகமது அசேன், அப்பு என்கிற ஜவஹர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இவர்களது செயலை கட்டுப்படுத்த, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஐபிஎஸ் (IPS) பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் மோகன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு வருடம் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பித்தார்.