தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கபில்சிபில் கருத்து பாஜக ஆசையை நிறைவேற்றும் செயல்' - கே.எஸ். அழகிரி - kapilsibil

காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவர் சோனியா காந்தி என்றும் கபில்சிபில் கூறியது தவறான கருத்து, பாஜக ஆசையை நிறைவேற்றும் செயல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

By

Published : Oct 1, 2021, 2:02 PM IST

விழுப்புரம்:விழுப்புரம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று(செப்.30) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார்.

காங்கிரஸ் தலைவரை உள்கட்சி தேர்தல் நடத்தி நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபில் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அழகிரி, "காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவர் சோனியா காந்தி. அவர்தான் எங்களுக்கு தலைவர். கபில்சிபில் கூறியது தவறான கருத்து. பாஜக ஆசையை நிறைவேற்றும் செயல். இதை பொது வெளியில் சொல்லக்கூடாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையில் குறைபாடு

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் குறைபாடு என்பது இருக்கத்தான் செய்யும். இருந்தபோதிலும் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதை பற்றி கவலைப்படவில்லை. கூட்டணி கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்.

கே.எஸ். அழகிரி

பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள்

முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன. ஆரம்பத்தில் இந்த அளவிற்கு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது சிரமமான காரியம். ஆனால் அதையும் திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, தேர்தல் வாக்குறுதி, குடும்ப அட்டைக்கு நான்காயிரம் வழங்கியதை முக்கிய உதவியாக பார்க்கிறேன். கொள்கை ரீதியாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம், நீட்டிற்கு எதிரான தீர்மானம் உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை சட்டப்பேரவையில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது.

இதை கடந்த ஆட்சியில் அதிமுக அரசு செய்யவில்லை. இது எல்லாம் பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டும் தீர்மானங்கள், இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

கோடநாடு வழக்கு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர், சட்டம்-ஒழுங்கு மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிபி தலைமையிலான காவல்துறையினர் நான்காயிரம் ரவுடிகளை கைது செய்துள்ளனர். கோடநாடு வழக்கில் எடப்பாடி அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - திமுக எம்எல்ஏ பேச்சுவார்த்தை

ABOUT THE AUTHOR

...view details