விழுப்புரம்:கோலியனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர், நடராஜன். இவருக்கும் இவருடைய மூத்த சகோதரரான ஸ்டாலின் என்பவருக்கும், நீண்ட காலமாக பாகப்பிரிவினை தொடர்பான பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் நடராஜன், தனது அண்ணன் ஸ்டாலினை பிரச்னை குறித்து பேசுவதற்காக பள்ளிக்கு அருகே வருமாறு அழைத்துள்ளார்.
இதனையடுத்து பள்ளியின் அருகில் நடராஜன், ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றவே, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆசிரியர் நடராஜனை, ஸ்டாலின் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைப் பார்த்த அங்கிருந்த பள்ளி மாணவர்கள், சண்டையை தடுக்க முயன்றுள்ளனர்.