நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிரதமரின் கிசான் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.
இந்தத் திட்டத்தில் அண்மையில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து வேளாண் துறை அலுவலர்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2.5 லட்சம் போலி பயனாளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.15 கோடி பறிமுதல்செய்யப்பட்டது. தொடர்ந்து பணத்தைப் பறிமுதல்செய்யும் நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கிசான் முறைகேடு தொடர்பாக வேளாண் துறையைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் புஷ்பராஜ், பழனிகுமார், பாரி, மாயவன், பிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் இவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டார்.
கிசான் திட்ட முறைகேடு: விழுப்புரத்தில் 7 பேர் கைது - விழுப்புரத்தில் 7 வேளாண் துறை ஒப்பந்த ஊழியர்கள் கைது
விழுப்புரம்: கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக வேளாண் துறை ஒப்பந்த ஊழியர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
vpm
இதையும் படிங்க: போலி நகையை அடகுவைத்து பண மோசடி: இளைஞர் கைது!