தமிழ்நாடு முழுவதும் தேசியமும் தெய்வீகமும் எனும் ஆறு நாள் ரத யாத்திரையை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சென்னையில் தொடங்கினார். பின்னர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வழியாக வந்த அவரை துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கருணாஸ் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து ரத யாத்திரைக்குக் காவல் துறையினர் அனுமதி வழங்கினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குச் சென்ற கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மதுரை விமான நிலையத்திற்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, யாத்திரைப் பயணம் மேற்கொள்கிறோம்.