தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படும் சுமார் 1000 லிட்டர் புளித்த சாராய ஊறல்கள் இருந்த ஐந்து பேரல்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்து அதனை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.

kallasarayam

By

Published : Jun 6, 2019, 4:16 PM IST

விழுப்புர மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரியும் ஆய்வாளர் ரேவதி தலைமையின் கீழ் அப்பகுதியில் மதுவிலக்கு சம்பந்தமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கள்ளச்சாரயம் காய்ச்சப் பயன்படுத்திய பொருட்கள் அழிப்பு

அப்போது கொனத்தூர் வடக்குப் பகுதியில் உள்ள ஓடையில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்கள் சுமார் ஐந்து பேரல்களில் 1000 லிட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்கையில், இந்தச் சாராய ஊறல்களின் உரிமையாளரை சின்ன சேலம் தாலுகா கொனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

பின்பு புளித்த சாராயம் ஊறல்களை சம்பவ இடத்திலே முழுவதுமாக கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தலைமறைவான வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details