கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அக்னி பிரவேச மஹா மங்கள ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையாக சுமார் 50 ஆயிரம் வெற்றிலையைக் கொண்டு சன்னதி முழுவதும் வெற்றிலை மாலையுடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் சின்னசேலம் சுற்றியுள்ள சுமார் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.