தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்தாண்டுகளில் கள்ளக்குறிச்சிக்கு ரயில் நிலையம் - கவுதம சிகாமணி எம்பி - கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

விழுப்புரம்: இன்னும் ஐந்தாண்டுகளில் கள்ளக்குறிச்சிக்கு ரயில் நிலையம் அமைக்கப்படும் என அத்தொகுதி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

By

Published : Sep 2, 2019, 12:19 PM IST

கள்ளக்குறிச்சியில் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பொன்முடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் கவுதம சிகாமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்னும் ஐந்தாண்டுகளில் கள்ளக்குறிச்சியில் தொடர்வண்டி நிலையம் அமைய முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

கள்ளக்குறிச்சி நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ரிங் ரோடு அமைக்க மக்களவையில் வலியுறுத்தியுள்ளதாகவும், விரைவில் ரிங் ரோடு அமைக்கப்படும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details