தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கா வவுத்து கஞ்சி குடிச்சாலும் அது கவுர்மென்ட் சம்பளமாக இருக்கணும்' - மூணு போஸ்டிங்கிற்கு முட்டிக்கிட்ட 1400 பேர்!

கள்ளக்குறிச்சி: ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மூன்று காலிப் பணியிடங்களுக்கு ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

By

Published : Dec 24, 2019, 11:02 PM IST

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம்
ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம்


கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இன்று நேர்முகத்தேர்வு நடைபெற்றது. மூன்று காலிப் பணியிடங்களே என அறிவித்திருந்தும் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு கலந்துகொண்டனர்.

மேலும், 8ஆம் வகுப்பு மட்டுமே கல்வித் தகுதியாக உள்ள இந்தப் பணியிடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளாக இருந்ததுதான் வேதனையான விஷயம்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம்

இது குறித்து நேர்முகத்தேர்விற்கு வந்தவர்கள் கூறும்போது, "குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பதைவிட, கடைநிலை ஊழியராக இருந்தாலும்கூட தங்களுக்கு அரசுப்பணி கிடைத்தால் போதும்" என வருத்தத்தோடு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அக்டோபரில் 12.44 லட்சம் வேலைகள் உருவாக்கம் - இஎஸ்ஐசி தகவல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details