விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பேருந்துகளின் மீது கல்வீசி தாக்கிவரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
சென்னை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப். 28ஆம் தேதியன்று அரசுப் பேருந்து உட்பட நான்கு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.