தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும்...!' - Vikravandi by election results

விழுப்புரம்: இனி வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என்று கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு தெரிவித்துள்ளார்.

kallakurichi admk mla prabhu

By

Published : Oct 24, 2019, 3:51 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் என மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றுமுடிந்தது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. காமராஜ் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றிபெற்றார்.

மற்ற இரண்டு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அதிமுகவின் கை ஓங்கியிருந்தது.

உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் - கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்

தற்போது இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளார் வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்த வெற்றியை அதிமுக தொண்டர்கள் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். இதன் ஓர் அங்கமாக கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு தலைமையில் அதிமுக தொண்டர்கள், தியாகதுருக்கத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியால் நாங்கள் இன்று இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இனி வருப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

மேலும், வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர், மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளிலும் அதிமுக அங்கம் வகித்து கட்சியைப் பலப்படுத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க:குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை.. விபத்து ஏற்படும் அபாயம்!

ABOUT THE AUTHOR

...view details