விழுப்புரத்தை அடுத்த காணை பகுதியில் மதரஸா கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஷபிகுர் ரஹ்மான் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
பாஜக ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் - காதர் மொய்தீன் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
விழுப்புரம்: பாஜக ஆட்சியில் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பாஜக ஆட்சியில் 'பசு பாதுகாப்பு' என்ற பெயரில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை மீண்டும் உயிர்பிப்பதற்கான மறைமுக சதிதான் இந்த புதிய கல்விக் கொள்கை திட்டம் என்றும் புதிய கல்வி கொள்கை திட்டத்தை, கல்வியாளர்களை கொண்டு தயாரிக்காமல் அவர்களது சிந்தனையில் உதித்தை வைத்து தயாரித்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார்.