தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற நகை - பணம் பறிமுதல் - உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த நகை - பணம் பறிமுதல்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1 லட்சத்து 42 ஆயிரம் பணம், 5 தங்க மோதிரங்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

election
election

By

Published : Mar 6, 2021, 7:49 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும் 10 கிராம் அளவிலான தங்க மோதிரத்தையும் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், சதீஷிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சதீஷ் வீடுர் பகுதியில் நகை நடத்தி வருவதும், வங்கியில் பணம் செலுத்துவதற்காக தங்க மோதிரத்தையும் ரொக்கத்தையும் எடுத்து செல்வதும் தெரியவந்தது. எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2,241 பென்சில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 57ஆயிரத்து 600 ரூபாய் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details