மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா கடந்த 24ஆம் தேதி அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக விழுப்புரம் நகராட்சி திடலில் மாவட்ட மாணவரணிச் செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பெண்களுக்கு தையல் மிஷன், எரிவாயு அடுப்பு, கல்லூரி மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சரும், விழுப்புரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளருமான சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு, பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.