மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஜெ., நினைவுதினம்: ஏழைகளுக்கு அறுசுவை அன்னதானம் - ஜெயலலிதா நினைவு தினம்
விழுப்புரம்: ஜெயலலிதாவின் நினைவுநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டது.
annathanam
இதன் ஒருபகுதியாக விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான இரா.இலட்சுமனன் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுகவின் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.