உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கும் நிலையில், பலரும் அவரது இந்த முடிவை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் நாம் கேட்டபோது, "அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று ரஜினி அறிவித்திருப்பது மிகவும் துணிச்சலான அறிவிப்பாகும்.
ஏனென்றால் அவரை அரசியல் கட்சி ஆரம்பிக்க நிர்பந்தம் செய்தவர்கள், இந்தியாவின் மிக உயர்ந்த அதிகார அமைப்பில் இருப்பவர்கள். அவர்களின் நிர்பந்தத்திற்கு பணியாமல் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது அவரது துணிச்சலையே காட்டுகிறது.