விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயஶ்ரீயை முன்விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகன், கலியபெருமாள் ஆகியோர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
முன்விரோதம் குறித்து பேசிய ஜெயஶ்ரீயின் தாய் பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த ஜெயஶ்ரீ, இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரழந்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயஶ்ரீயின் தாயார் ராஜீஶ்ரீ கூறுகையில், "முன்விரோதம் காரணமாக, எனது மகள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டார். எனது மகளுக்கு நிகழ்ந்த கொடுமை போல் வேறுயாருக்கும் நிகழக்கூடாது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து வேதனை தெரிவித்த தாய் அப்போதுதான் எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும். மேலும் எங்களது குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" எனக் கேட்டு கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் வெறிச்செயல்: எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் கலங்கவைக்கும் வாக்குமூலம்!