தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி சான்றிதழ் கேட்டு கோட்டாச்சியரிடம் பழங்குடியின மாணவி மனு...! - விழுப்புரம் வருவாய் கோட்டாச்சியரிடம் மனு

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள பரங்கனி கிராமத்தை சேர்ந்த இருளர் மாணவி தனலஷ்மி என்பவர், சாதி சான்றிதழ் வழங்கக்கோரி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

பழங்குடியின மாணவி சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் கோட்டாச்சியரிடம் மனு...!
பழங்குடியின மாணவி சாதி சான்றிதழ் கேட்டு வருவாய் கோட்டாச்சியரிடம் மனு...!

By

Published : Aug 6, 2020, 6:58 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள பரங்கனி கிராமத்தை சேர்ந்தவர் தனலஷ்மி. இருளர் சமூகத்தை சேர்ந்த இவர், அண்மையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்நிலையில், மேற்படிப்பில் சேருவதற்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரிடம் இன்று (ஆகஸ்ட் 6) மனு அளித்துள்ளார்.

பழங்குடியின மாணவி தனலஷ்மி செய்தியாளர்ச் சந்திப்பு...!

இதுகுறித்து மாணவி தனலஷ்மி கூறும்போது, "நான் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் சாதி சான்றிதழ் இல்லாததால் என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை. எனவே, எனக்கு விரைவில் சாதி சான்றிதழ் வழங்கி எனது மேற்படிப்புக்கு மாவட்ட ஆட்சியர் உதவ வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க...தேசிய கல்விக் கொள்கை சாதகமா? பாதகமா? - விவாதம்

ABOUT THE AUTHOR

...view details