தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு - Two children died kallakuruchi

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
குளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு

By

Published : Jan 22, 2020, 10:35 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது ஏழு வயது மகள் வைஷ்ணவி, அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது நான்கு வயது மகள் அனுஸ்ரீ ஆகிய இருவரும் இன்று மதியம் வீட்டிற்கு அருகில் உள்ள குளக்கரையில் விளையாடி கொண்டிருந்தனர்.

நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர்கள் குளக்கரைக்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது குளத்தில் மூழ்கி குழந்தைகள் இருவரும் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தைகள் இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இரண்டு குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details