சென்னைஇன்று (டிச .12) , தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் பங்கெடுத்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒமைக்ரான் தொற்று வரும் முன் தற்காத்துக்கொள்ளும் விதமாக எடுக்க இருக்கும் செயல்கள் குறித்து ஆலோசித்தனர்.
காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தடுப்பூசிப் பாணிகளும், தற்காப்புப் பணிகளும் தீவிரம்:
தமிழ்நாட்டில் முதலில் தகுதியுடையோருக்கான தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவ கட்டமைப்புகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல், பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுமாயின் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் உடனடியாக வழங்கவும், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.