தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகள் ஆய்வு: அலுவலர்களுக்கு அறிவுரை

விழுப்புரம்: நல்லாவூர் ஊராட்சியில் நடைபெற்று முடிந்த குடிமராமத்துப் பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

குடிமராமத்து பணிகள் ஆய்வு
குடிமராமத்து பணிகள் ஆய்வு

By

Published : Oct 22, 2020, 9:38 PM IST

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் நல்லாவூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த குடிமராமத்து - கரையை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகளை நதிநீர் பாதுகாப்புக் கழகத் தலைவரும், நீர்வள மேலாண்மை இயக்குநருமான சத்யகோபால் இன்று (அக்டோபர் 22) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின்போது ஏரிகள், அணைக்கட்டுப் பகுதிகளுக்கு நீர் வரும் வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி அகலப்படுத்துவதோடு, கரையினையும் பலப்படுத்த வேண்டும் எனப் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள், அலுவலர்களுக்கு சத்யகோபால் அறிவுரை வழங்கினார்.

மேலும் பாசனதாரர்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து இப்பணிகளில் முழுவதுமாக ஈடுபட்டு இத்திட்டத்தினைச் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டுமென நதிநீர் பாதுகாப்புக் கழகத் தலைவர் சத்யகோபால் கேட்டுக்கொண்டார்.

குடிமராமத்துப் பணிகள் ஆய்வு
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details