விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. திமுகவைச் சேர்ந்தவரான இவர், கடந்த ஜூன் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நாகமலை கிராமத்தைச் சேர்ந்த அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் தாக்கல் செய்துள்ளார். மேலும், தீவிர பரப்புரை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.