நாடு முழுவதும் நாளை (ஆக. 15) சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக சுதந்திர தின விழாவை எளிமையாகவும், சமூக இடைவெளியுடனும் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் வெடிகுண்டு சோதனை! - villupuram latest news
சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
police