தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல நகை கடைகளில் வருமான வரித்துறை சோதனை! - சிவ வள்ளி விலாஸ் நகை கடையில் வருமான வரித்துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் உள்ள சிவ வள்ளி விலாஸ் நகைக் கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவ வள்ளி விலாஸ் நகை கடை
சிவ வள்ளி விலாஸ் நகை கடை

By

Published : Feb 15, 2022, 6:31 PM IST

Updated : Feb 15, 2022, 7:00 PM IST

விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததோடு அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக சிவ வள்ளி விலாஸ் நகை கடை மீது புகார் எழுந்தது. இதையடுத்து இன்று (பிப்.15) விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே நேருஜி சாலையில் இயங்கிவரும் சிவ வள்ளி விலாஸ் நகை கடையில் வருமான வரித்துறையினர் காலை 11.30 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த 10 அலுவலர்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல் கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிவ வள்ளி விலாஸ் நகை கடையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. கடை ஷட்டர்கள் அடைக்கப்பட்டு தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துகளை முடக்க அனுமதித்த சிறப்பு நீதிமன்றம்

Last Updated : Feb 15, 2022, 7:00 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details